உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.10½ லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் - மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 27-வது வார்க்குட்பட்ட வடிவீஸ்வரம் தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம்
- 36-வது வார்டு கே.பி 2-வது குறுக்கு தெருவில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்க்குட்பட்ட வடிவீஸ்வரம் தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டிலும், 36-வது வார்டு கே.பி 2-வது குறுக்கு தெருவில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், மாமன்ற உறுப்பினர்கள் கோபாலசுப்பிரமணியன், ரமேஷ் ஜெயவிக்ரமன், செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மாநகர துணை செயலாளர் வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் முருகன், ஜெயகிருஷ்ணன், வழக்கறிஞர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.