உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

உயிர்பிழைக்க கயிற்றை பிடித்துக் கொண்டு போராட்டம்

Published On 2022-12-21 07:48 GMT   |   Update On 2022-12-21 10:51 GMT
  • வள்ளம் கவிழ்ந்ததால் இரவு முழுவதும் கடலில் தத்தளித்தோம்
  • கரை திரும்பிய மீனவர்கள் பற்றி உருக்கம்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கீழ கடியபட்டணத்தை சேர்ந்த எட்வின் ஜெனில் (வயது 34) சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த 18-ந்தேதி பிற்பகல் கடியபட்டணத்தை சேர்ந்த மீனவர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் இவர்கள் கரை திரும்ப வேண்டும்.

ஆனால் 3 நாட்கள் ஆகியும் அவர்கள் கரை திரும்ப வில்லை. இதனால் குடும்பத்தினர் பீதி அடைந்த னர்.இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ், மாவட்ட கலெக்டரை சந்தித்து கரை திரும்பாத மீனவர்களை துரிதமாக தேடி கண்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதனிடையே தூத்துக்குடி கோஸ்டல் கார்டு கப்பலும் கன்னியாகுமாரி கடல் பகுதியில் தீவிரமாக தேடி வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை திரும்பி வருவதாக மரைன் போலீசார் தகவல் கிடைத்தது.

இந்த விசைப்படகு நேற்றிரவு கரை திரும்பியது. மாயமான 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.இதற்கிடையே வள்ளம் உரிமையாளர் எட்வின் ஜெனிலுக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.அவர் முட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கடிய பட்டணம் பங்குத்தந்தை பபியான்ஸ் கூறியதாவது:-

கடந்த 18-ந் தேதி வழக்கம் போல் வள்ளத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 40 நாட்டிங்கல் தூரத்தில் செல்லும்போது இரவு வேளையில் எதிர் பாராமல் வள்ளம் கவிழ்ந்தது.இதில் அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.

வள்ளத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தும், முடிய வில்லை. இதனால் வள்ள த்தில் இருந்த கயிற்றை பிடித்து தத்தளித்து நின்று உள்ளனர். 24 மணிநேரம் அவர்கள் கடலில் தத்தளித்து உள்ளனர்.

மறுநாள் வள்ளத்தை நிமிர்த்தி, அதன் மேல் ஏறி உட்கார்ந்து இருந்து உள்ளனர்.அப்போது தான் அழிக்கால் விசைப்படகு அங்கு வந்துள்ளது. அவர்கள் வள்ளத்தில் இருந்த 5 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்துள்ளனர் என்றார்.

Tags:    

Similar News