உள்ளூர் செய்திகள்

சுமித்திரன்

களியக்காவிளை அருகே நர்சிங் மாணவர் சாவில் மர்மம்

Published On 2023-01-31 06:40 GMT   |   Update On 2023-01-31 06:40 GMT
  • விடுதியில் இருந்து வெளியேறிய மாணவர்கள்
  • பெற்றோர் அழைத்துச் சென்றதால் பரபரப்பு

கன்னியாகுமரி:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுமித்திரன் (வயது 19). இவர் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் விடுதியின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர் சுமித்திரன் உடலை களியக்காவிளை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சுமித்திரன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்கா விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலை யில் மாணவர் சுமித்திரன் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சூழலில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் தங்கள் பிள்ளைகளின் பாது காப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

அதற்கு கல்லூரி நிர்வா கம் கொடுத்த விளக்கத்தால் திருப்தி அடையாத சில பெற்றோர், தங்கள் பிள்ளை களை வீட்டிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.மேலும் சில மாணவர்கள் தாங்களாகவே வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி வளாகத்தில் பர பரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News