உள்ளூர் செய்திகள்

லாரிகளில் இருந்து இலவச வேட்டி-சேலைகள் தாலுகா அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம்.

பொங்கல் பண்டிகைக்கு விநியோகிக்க இலவச வேட்டி-சேலைகள் குமரி மாவட்டம் வந்தன

Published On 2022-12-31 15:12 IST   |   Update On 2022-12-31 15:12:00 IST
  • மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.
  • தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

நாகர்கோவில்:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் வேட்டி-சேலைகளை இலவசமாக வழங்கி வரு கிறது.

அதன்படி இந்த ஆண்டும் நியாயவிைலக் கடைகள் மூலம் வேட்டி-சேலை களை வழங்க அரசு உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து வேட்டி-சேலைகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடிந்ததும் அவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

சென்னையில் இருந்து மண்டலம் வாரியாக அனுப்ப ப்பட்டு, பின்னர் மாவட்ட ங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதன்படி குமரி மாவட்டத்தில் விநியோ கிக்கப்பட வேண்டிய வேட்டி-சேலைகள் லாரிகள் மூலம் வந்தன. மாவட்டத்தில் 5.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், முதல் கட்டமாக 1 லட்சம் வேட்டி-சேலைகள் வந்துள்ளன.

தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் வேட்டி-சேலைகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தாலுகா அலுவலகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட வேட்டி-சேலைகள்,வட்டா ட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

அங்கிருந்து அவை விரைவில் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

Tags:    

Similar News