உள்ளூர் செய்திகள்

மணக்குடி காயல் பகுதியில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.

மணக்குடி காயல் பகுதியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தது

Published On 2023-01-17 12:53 IST   |   Update On 2023-01-17 12:53:00 IST
  • ரஷியா, மலேசியா நாடுகளில் இருந்து வந்துள்ளது
  • அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவது வழக்கம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இரு பருவமழை பெய்வதால் எப்பொழுதும் மிதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் இறை தேடி குமரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது.

சுசீந்திரம் குளம், புத்தளம் காயல், தேரூர் குளம், மணக்குடி காயல் பகுதிகளில் அதிக அளவு பறவைகள் வந்து குவியும்.ஆனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பறவைகள் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது அதிக அளவு பறவைகள் வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து ரஷியா, மலேசியா, துபாய், சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வந்துள்ளது. மணக்குடி காயல் பகுதியில் அதிகளவு பறவைகள் குவிந்து வருகின்றன.

உள்ளான், செங்கால் நாரை, ஊசிவாள்வாத்து, பிலம்பிங் கோஸ், பாம்பு தாரா, புள்ளி மூக்கு தாரா, கூழக்கடா, பெரியவெண் மூக்கு, சாம்பல் கொக்கு, அரிவாள் மூக்கன், கரண்டி வாய் மூக்கன், பூநாரை, வெள்ளை மீன் கொத்தி போன்ற பறவைகள் இங்கு வந்து உள்ளது.

பறவைகள் காயல்பகுதியில் வந்து குவிந்து உள்ளதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் ஆர்வமாக சென்று பார்த்து வருகிறார்கள்.

இதுகுறித்து பறவை ஆர்வலர் பாலச்சந்திரன் கூறுகையில், புத்தளம் பகுதி யில் தற்பொழுது அதிக அளவில் வெளிநாட்டு பறவை கள் வந்து குவிந்துள் ளது ஆச்சரியத்தை ஏற்ப டுத்தி உள்ளது. குமரி மாவட்டம் பறவைகளின் சரணா லயமாக மாறி வருகிறது. குறிப்பாக புத்தளம் காயல் பகுதியில் குஞ்சு பூநா ரைகள் அதிக ளவு வந்துள்ளது பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த ஆண்டு பறவைகளின் வருகை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News