உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதுசூதனன் நாயரை தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடிய போது எடுத்தபடம்.

திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் சிக்கினார்

Published On 2022-12-27 07:30 GMT   |   Update On 2022-12-27 07:30 GMT
  • தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
  • தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.

திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளித்து வருகின்றனர். திருவட்டார் கொற்றுபுத்தன் வீடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் (வயது 52) என்பவரும் இன்று காலை ஆற்றில் குளிக்க வந்தார்.

அவர் தண்ணீரில் இறங்கி குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தண்ணீரின் வேகம் அதிக மாக இருந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகி றது.

ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பகுதி யில் குளித்துக் கொண்டிருந்த வர்கள் மதுசூதனன் நாயரை தேடினர். அப்போது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

எனவே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குலசேகரம் போலீசார் மற்றும் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து, மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வேகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News