உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன் பா.ஜனதாவில் இணைந்தபோது எடுத்த படம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன் பா.ஜனதாவில் இணைந்தார்
- நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகி குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.ஏ. தங்கராஜ் மற்றும் சங்கர் உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர்.
நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் முன்னிலை வைத்தார் இதில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மணி, தணிக்கை குமார், தாமரைத் துறை அரசன் ஆர்.எஸ். பாரத் செல்வ சுப்பிரமணியன், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்