கன்னியாகுமரி தொகுதியில் சாலை சீரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
- மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு ஊராட்சி யில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுவதுடன், இச்சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்ற நிலை உள்ளது. மேலும் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
ஊராட்சி சாலைகள் மற்றும் ஒன்றிய சாலை களை மாவட்ட சாலை களாக தரம் உயர்த்தி முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சா லைத்துறை பொறியா ளர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தேன்.
இதன் அடிப்படையில் தற்போது ஊராட்சி சாலை களை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதியில் வடக்கு தாமரைகுளம்-பறக்கை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ. 1 கோடியே 57 லட்சமும், புதுக்குளம் சாலை- கடம்பாடி விளாகம் வழி, ஆலந்துறை தெற்கு மேடு காலனி அலங்காரமூலை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ.5 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரமும், பறக்கை-தாமரைக்குளம் சாலை தரம் உயர்த்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சாலை பணிகள் விரை வில் தொடங்கி சீரமைக் கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.