உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குலசேகரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

Published On 2023-01-27 08:14 GMT   |   Update On 2023-01-27 08:14 GMT
  • 419 மது பாட்டில்கள் பறிமுதல்
  • குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

கன்னியாகுமரி:

குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் தனியார் மதுபான கடைகளும் திறக்கப்பட வில்லை.

இதனால் குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த 319 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த றாபி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோல சேக்கல் பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்த 55 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை விற்றதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கல்லடிமாமூடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 419 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News