உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

தக்கலை விபத்தில் 2 பேர் பலி

Published On 2023-02-19 08:04 GMT   |   Update On 2023-02-19 08:04 GMT
  • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கேரள அரசு பஸ்
  • தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது பஸ் ஏறி இறங்கியுள்ளது.

கன்னியாகுமரி:

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடந்தது.

இதில் கால் நடையாகவும், ஓட்டமாகவும், சிலர் இருசக்கர வாகனத்திலும் சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 12 சிவாலயங்களை வழிபடும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 54), மற்றும் ராஜன் (55) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

9-வது சிவாலயமான திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்வதற்காக தக்கலை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் புலியூர்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் போது எதிரே வந்த கேரளா அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது அந்த பஸ் ஏறி இறங்கியுள்ளது.

இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். போலீசார் 2 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தக்கலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கேரளா அரசு பஸ்சை சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News