உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
திருவட்டார் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
- டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு
- திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள சரல்விளை அருவி க்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 37), தொழிலாளி.
இவரது உறவினர் பாபு (50) . இவர் தக்கலை பகுதியில் அரசு டாஸ்மாக்கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 2 பேருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்துன்று சுனிலின் வீட்டிற்குச் சென்ற பாபு தகாத வார்த்தைகள் பேசிய தோடு கையில் மறைத்து வைத்து இருந்த அரி வாளை எடுத்து சுனிலை வெட்டினார். இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதனைப் பார்த்ததும் பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுனில் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வருகிறார்கள்.