உள்ளூர் செய்திகள்

25 பயனாளிகளுக்கு உபகரணங்கள்- கலெக்டர் வழங்கினார்

Published On 2022-12-25 16:49 IST   |   Update On 2022-12-25 16:49:00 IST
  • மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
  • மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சக்கர நாற்காலி, திறன்பேசி, ஊன்றுக்கட்டைகள், காதுக்கு பின் அணியும் காதொலிக்கருவி, மோட்டார் பொருந்திய தையல் எந்திரம் போன்ற உபகரணங்கள் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 300 மதிப்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், அனைத்து சிறப்பு பள்ளியின் தாளாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News