உள்ளூர் செய்திகள்
கடத்தூர் பகுதியில் ரோஜா செடிகளில் நோய் தாக்குதல்
- கடத்தூர் பகுதியில் ரோஜா செடிகளில் நோய் தாக்குதல் ஏற்படுதவதால் அதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த கோரிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- பல ஏக்கரில் ரோஜா சாகுபடி
தருமபுரி மாவட்டப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூச்செடிகள் பயிரிட்டு வருகின்றார். இந்த பூச் செடிகள் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அந்த அந்த பகுதிகளில் உள்ள மருத்து கடைகளில் மருந்துகள் வாங்கி அடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பூக்களுக்கு போதிய விலையில்லாத நிலையில் பெரும் நஷ்டத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் செடிகள் நோய், பூச்சிகள் புலுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மருந்துகள் தெளித்தும் பலனில்லாத நிலையில் மேலும் இழப்பிற்க்கு உள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமங்களில் நேரடி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நோய் தடுக்கும் தரமான மருந்துகள் பயன்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.