கோப்பு படம்.
சின்னமனூர் அருகே கபடி வீரரை தாக்கி கொலை மிரட்டல்
- சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
- அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை யைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவரது உறவினர் காசிமாயன் (24). இவர் சென்னையில் உள்ள கல்லூ ரியில் படித்து வருகிறார். மேலும் கபடி அணியிலும் விளையாடி வருகிறார். சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, நாகராஜ், இமானுவேல், முருகன், பிரகாஷ் ஆகியோருக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சூர்யா மற்றும் காசிமாயன் ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.
காயமடைந்த 2 பேரையும் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.