உள்ளூர் செய்திகள்

போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் எம்.எல்.ஏ. ஓய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா உள்பட பலர் உள்ளனர்.

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-18 10:25 GMT   |   Update On 2022-08-18 10:25 GMT
  • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
  • இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எம்.ஏ., செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், "தேவராஜ்" 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நடை ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தடகள சங்கத்தின் மாநில தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார்.

தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநில துணைத் தலைவரும், பர்கூர் எம்எல்ஏ.,வுமான மதியழகன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து விளை யாட்டுப் போட்டிக்கான கொடி ஏற்றப்பட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது.

இதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் நேற்று முன்தினம் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எம்.ஏ., செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., வெற்றிச் செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், மாநில தடகள சங்க பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட தடகள சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணன், விளையாட்டு துறை இணை இயக்குனர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, மாநில தடகள சங்க மேலாளர் வினோத்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாகோஜனஅள்ளி தம்பிதுரை, பர்கூர் சந்தோஷ்குமார், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News