உள்ளூர் செய்திகள்

ஓசூர் ஜான் போஸ்கோ மகளிர் பள்ளியில் மாநில அளவிலான கோ-கோ போட்டிகள்

Published On 2022-06-27 13:46 IST   |   Update On 2022-06-27 13:46:00 IST
  • கோ- கோ சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் சகோதரி ஏஞ்சலா ஆகியோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர்.

ஓசூர், 

ஓசூர் ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 40-வது மாநில அளவிலான, 18வயதுக்குட்பட்ட இளையோர் பிரிவு மாணவிகளுக்கான கோ- கோ சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சிவகங்கை மாவட்டமும் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டமும் கலந்து கொண்டன. சிவகங்கை மாவட்டம் முதலிடத்தையும், கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டம் இரண்டாமிடத்தையும், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மூன்றாமிடத்தையும் வென்றன. கிருஷ்ணகிரி வடக்கு மாவட்ட அணியைச் சேர்ந்த மாலா, சேசர் பட்டத்தையும், இன்பதமிழரசி ஆல்ரவுண்டர் பட்டத்தையும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜாய்ஸ் டிபென்டர் பட்டத்தையும் வென்றனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், புனித ஜான் போஸ்கோ பள்ளிகளின் தாளாளர் சகோதரி ஏஞ்சலா ஆகியோர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர்.

மேலும் இதில், ஓசூர் சிப்காட் பிரைடு அரிமா சங்க தலைவர் மல்லேஷ், மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ், மாநில கோகோ கழக பொதுச்செயலாளர் நெல்சன் சாமுவேல், ஓசூர் போக்குவரத்த புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, இந்திராணி, பாக்யலட்சுமி, காங்கிரஸ் நிர்வாகி சத்யமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News