உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
வேடசந்தூரில் மில் ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
- தொழிலாளி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் திருடுபோயிருந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார்மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்வேலைக்கு சென்றுவிட்டார். மனைவியும் வீட்டைபூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.