உள்ளூர் செய்திகள்

செடி, கொடிகள் மண்டியுள்ள ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்கால்.

ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்காலை தூர்வார வேண்டும்

Published On 2023-06-17 08:02 GMT   |   Update On 2023-06-17 08:02 GMT
  • பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது.
  • 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்புகா வேரி பிரிவு வாய்க்காலில் வள்ளி செடிகள் , ஆகாய தாமரை செடிகள் மண்டியுள்ளது.

அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை, பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உடனடியாக ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னரே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News