ேசலம் செவ்வாய்ப்பேட்டையில் மயங்கி விழுந்து பெண் சாவு
- கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
- திடீரென நெஞ்சு வலி அதிகமாக உள்ளது எனக் கூறி மகேஸ்வரி மயக்கமடைந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் இளம்பிள்ளை சித்தர்கோவில், நாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 46). இவர் செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு கிழங்கு மாவு மில்லில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் இவர் மட்டும் தனியாக சித்தர் கோவில் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மில்லுக்கு வேலைக்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி அதிகமாக உள்ளது எனக் கூறி மகேஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த உடன் பணிபுரியும் நபர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.