உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரிகளுக்கு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-12-31 12:29 IST   |   Update On 2022-12-31 12:29:00 IST
  • கஞ்சா வியாபாரிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
  • கஞ்சா வியாபாரிகளுக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே கன்னிவாடி குரும்பபட்டி பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திவாகர் என்பவர் 22 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை கைது செய்து விசாரித்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சுகப்பிரியா என்பவர் மொத்த வியாபாரியாக செயல்பட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குபதிவு செய்து மதுரை கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

இதனை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் திவாகருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.1லட்சம் அபராதமும், சுகப்பிரியாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கஞ்சா வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News