உள்ளூர் செய்திகள்

செங்கோட்டைக்கு மினிவேனில் வந்த பலாப்பழங்கள்.


செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விலை உயர்வு

Published On 2022-06-07 09:23 GMT   |   Update On 2022-06-07 09:23 GMT
  • செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விலை உயர்ந்துள்ளது.
  • தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.

செங்கோட்டை:

முக்கனிகளில் ஒன்றான பழாப்பழம் ருசியில் தனிச்சிறப்புடையது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அடிவாரத்தில் குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பலா மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் சுவை மிகுந்ததாக உள்ளது. ஆண்டிற்கு இருமுறை மட்டுமே பலன் தருவது பழாமரங்கள். தமிழகத்தில் செம்பருத்தி பலா, மஞ்சள் வர்க்கை, வெள்ளை வர்க்கை, வேர்பலா என பலா பலவகைகளில் காணப்படுகிறது.

செங்கோடடை பகுதியில் பழாப்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

சிறப்பு பெற்ற பலாமரங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பத்தால் வாடி வெம்பி கருகி விடுகிறது. இதற்கு தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாக உள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது எடை மற்றும் சுளைகள் குறைந்து காணப்படுகின்றன. விளைந்த பழங்களை கொண்டுவர கூலியாக 3 அல்லது 4 பழங்களுக்கு ரூ. 300-க்கு மேல் செலவாகிறது.

அதனால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு பழம் ரூ. 50, ரூ. 100-க்கு விற்கபபட்ட நிலையில் தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.

தற்போது கேரளாவில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News