உள்ளூர் செய்திகள்

தேசிய நதிகளை இணைக்கும் விவகாரம்: மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பெற மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-06-30 14:37 IST   |   Update On 2022-06-30 14:37:00 IST
  • தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
  • பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறார்கள்.தமிழகத்திலே 17 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறார்கள்.

ஓசூர்,

ஓசூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் அடுத்த ( ஜூலை) மாதம் 5-ம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு ராம கவுண்டர், பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தெலுங்கானா மாநி லத்தில் வேளாண்மைக்காக, பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறார்கள்.தமிழகத்திலே 17 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறார்கள் 30% தமிழகத்திலே ஒதுக்கினால் சிறப்பான வேளாண்மை வளர்ச்சி ஏற்படும்.

தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சில மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது. அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் வண்ணப்பா, பொருளாளர் சுப்பிரமணிய ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சர்வேஷ் ரெட்டி, நாகராஜ் ரெட்டி, நரசிம்மரெட்டி, சந்திரா ரெட்டி கிருஷ்ணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News