உள்ளூர் செய்திகள்

விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மேயர் சண்.ராமநாதன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

தஞ்சை அரசு கல்லூரி மாணவர் விடுதியில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா?- மேயர் திடீர் ஆய்வு

Published On 2023-04-11 15:32 IST   |   Update On 2023-04-11 15:32:00 IST
  • மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்.
  • விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி அமைந்துள்ளது.

இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு தரமான முறையில் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து.

இந்த விடுதியில் திடீரென மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா? எனறு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறி இல்லை.

மோர் மோசமாக இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக தரமாக வழங்க வேண்டும்.

சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதற்கு மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும், மின் விளக்குகள் வரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கூறினர்.

கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

மேலும் உங்களது தேவைகள் எதுவானாலும் தயங்காமல் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறி தனது மொபைல் எண்ணை தெரிவித்தார்.

Tags:    

Similar News