தருமபுரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
- பயிற்சியின் போது தாடாசனம், உட் கட்ட ஆசனம், திரிகோண ஆசனம், முத்தர ஆசனம் உள்ளிட்ட பத்து ஆசனங்கள் அளிக்கப்பட்டது.
- நாள்தோறும் யோக பயிற்சிகளை மேற்கொண்டால் மிகுந்த மன வலிமையுடன் செயல்படலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் மாற்றங்களும், நன்மைகளையும் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகள் அறிந்து உள்ளது.
யோகாசன பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் நரேந்தர மோடி ஐ.நா., சபையில் முன்மொழிந்தார். இதையடுத்து 2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் செந்தில் ராஜன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். இந்த பயிற்சியை யோகா ஆசிரியை ஜெயப்பிரியா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின் போது தாடாசனம், உட் கட்ட ஆசனம், திரிகோண ஆசனம், முத்தர ஆசனம் உள்ளிட்ட பத்து ஆசனங்கள் அளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் இந்த யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்திற்கும் மன வலிமைக்கும் இந்த யோகா பயிற்சிகள் பெரிதும் உதவுவதாகவும், நாள்தோறும் யோக பயிற்சிகளை மேற்கொண்டால் மிகுந்த மன வலிமையுடன் செயல்படலாம் எனவும் இந்த யோகா தினத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ கீதா ராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.