விபத்தில் சிக்கி காயமடைந்த கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை
- பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காயங்கள் குணமாகவில்லை.
- மனமுடைந்த மணி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகேயுள்ள் சாந்தி நிகேதன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 47). இவர் கட்டிட ஒப்பந்த தாரராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் விபத்தில் சிக்கி நாகேஷ் படுகாயம் அடைந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காயங்கள் குணமாகவில்லை.
இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த நாகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கே.ஆர்.பி. டேம் அருகேயுள்ள சின்ன காவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 46). சொந்தமாக தொழில் செய்து வந்த மணி இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கியதால் மனமுடைந்த மணி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராஜம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கே.ஆர்.பி.டேம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல தேன்கனி கோட்டை பாலபள்ளி பகுதியி சேர்ந்தவர் நஞ்சப்பா (40). குடி பழக்கம் உள்ளவர். குடும்ப தகராறில் தனியாக வசித்து வந்தார். இதில் மனம் உடைந்த நஞ்சப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.