உள்ளூர் செய்திகள்

வரலாறு குறித்த தகவல்களை தேடி தேடி அறிய வேண்டும் - தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் அறிவுறுத்தல்

Published On 2023-02-25 04:52 GMT   |   Update On 2023-02-25 04:52 GMT
  • பொருட்கள் கிடைக்கும் போது அதன் காலத்தை கண்டறிந்து பாது காக்கிறோம்.
  • காப்பாற்றி, பாதுகாப்பாக, பொக்கிஷமாக்கி வைக்க வேண்டி யதாகும் என்றார்.

திருப்பூர் :

திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் பழங்கால பொருட்கள் குறித்த கண்காட்சி நடந்தது. கல்லூரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். பண்டைய புதைவடிவங்களை கண்டறியும் முறை' எனும் தலைப்பில் வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையம் தொல்பொருள் ஆய்வாளர் பொன்னுசாமி பேசினார். முன்னதாக, வரலாற்றுத்துறை தலைவர் கிரிஜா ஆரோக்கியமேரி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் இடையர்பாளையம், குமரலிங்கம், செங்கத்துறை பகுதியில் இருந்து அதிகளவில் தொல்லியல், புரதான பொருட்களை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கும் போது அதன் காலத்தை கண்டறிந்து பாதுகாக்கிறோம்.

பல ஆண்டுகள் கடந்து வரும் வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்றின் எச்சங்களை துறை மாணவிகள் நீங்கள் தான் சொல்லித்தர வேண்டும். மாணவிகள் வரலாறு குறித்த தகவல்களை முழுமையாக தேடிதேடி அறிய வேண்டும். காதில் வாங்கிக் கொண்டு விட்டு போவதல்ல வரலாறு. காப்பாற்றி, பாதுகாப்பாக, பொக்கிஷமாக்கி வைக்க வேண்டியதாகும் என்றார்.

Tags:    

Similar News