உள்ளூர் செய்திகள்

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி ஆசிரியர்களுடன் சிறுவர்-சிறுமிகள் பேரணியாக சென்ற காட்சி.

நெல்லை மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் பாலர் ஞாயிறு பண்டிகை

Published On 2023-07-30 09:02 GMT   |   Update On 2023-07-30 09:02 GMT
  • பாலர் ஞாயிறு பண்டிகை நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம்.
  • முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

நெல்லை:

சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் ஆண்டுதோறும் பாலர் ஞாயிறு பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆராதனையின் வேதபாட வாசிப்பு, பாடல்கள் ஆகியவற்றை சிறுவர்- சிறுமிகளே செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான பாலர் ஞாயிறு பண்டிகை சுதந்தரம் - கடவுளின் பரிசு என்ற தலைப்பில் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

மேலப்பாளையம் அருகே சேவியர்காலனி சேகரத்திற்கு உள்பட்ட தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பாலர் ஞாயிறு பவனிக்கு சேகர தலைவர் காந்தையா தலைமை தாங்கினார். சபை ஊழியர் கிறிஸ்டோ பர் முன்னிலை வகித்தார்.

தேவாலயத்தில் இருந்து ஞாயிறு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பவனியாக சென்றனர். காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டி யும் மழலைகள் ஜெபம் செய்தனர்.

Tags:    

Similar News