உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சி அளிக்கும் காட்சி

நீர்வரத்து அதிகரிப்பு: விரைவில் நிரம்பும் வீடூர் அணை

Published On 2022-12-15 07:37 GMT   |   Update On 2022-12-15 07:37 GMT
  • நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

விழுப்பரம்:

விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில். அமைந்துள்ள வீடூர் அணையிலிருந்து தமிழகத்தில் 2200 ஏக்கர், புதுவையில் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வடகிழக்கு பருவ மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய பணமலை பேட்டை, செஞ்சி , மேல் மலையனுார் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்குநீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாகும்.இன்று காலை நிலவரப்படி அணைக்கு 472 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் .30, 325 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வருகின்ற நீரின் அளவை கணக்கிட்டு பார்த்தால் நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணி த்துறை செயற்பொறியாளர் ஷோபனா ,உதவி பொறியாளர் ரமேஷ் இளநிலை பொறியாளர்.பாபு ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இன்று மதியம் விழுப்புரம் கலெக்டர் மோகன் அணையை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி விபத்துகள் ஏற்படாத வண்ணம் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் அணையில் பொதுமக்கள் , இளைஞர்கள் யாரும் குளிக்காத வகையில் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நாளை அதன் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனர்.

Tags:    

Similar News