உள்ளூர் செய்திகள்

காய்கறிகள் விலை அதிகரிப்பு

Published On 2023-06-16 13:49 IST   |   Update On 2023-06-16 13:49:00 IST
  • கோடை வெயிலால் காய்கறி களின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
  • ஒரு பெட்டி தக்காளி ரூ.650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயிலால் காய்கறி களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 60ரூபாய், தக்காளி 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 650 ரூபாய், முள்ளங்கி 25 ரூபாய், பாவக்காய் ஒரு கிலோ 60 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய், புட்டுஅவரை ஒரு கிலோ 60 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 30 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய், தலணிகாய் 40 ரூபாய், புடலை 40 ரூபாய் என கடத்தூர் பகுதியில் காய்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரத்து குறைந்த நிலையில் விலை ஏற்ற த்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விலை ஏறும் என வியாபாரிகள் தெரிவிக்கி ன்றனர்.

Tags:    

Similar News