நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில்ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
- தருமபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.
- நாடார் கொட்டாய் பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒகேனக்கல்,
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் தருமபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் இன்று காலை ஒலி பெருக்கி வாகனம் மூலம் காவிரி கரையோர பகுதிகளான முதலைப்பண்ணை, ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பணிகள் ஆற்றில் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பரிசல் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசலில் செல்ல வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.