சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரிப்பு
- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் விளை விக்கப்படுகிறது.
- காலிபிளவர் வரத்து அதிகரிப்பு
அன்னதானப்பட்டி:
சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், கோத்தகிரி, ஓசூர், ராயக்கோட்டை, கெலமங்கலம், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதி களில் காலிபிளவர் விளை விக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.
இதன் காரணமாக ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து, கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காலிபிளவர் என்பதால் பொதுமக்கள், பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்சமயம் சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ ,தற்போது ரூ.10,ரூ.15 , ரூ.20 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது. குழம்பு, பொரியல், மற்றும் காலிபிளவர் சில்லி போட அதிகளவில் விற்பனை ஆகிறது . இன்னும் சிலமாதங்களுக்கு அதிகளவில் வரத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.