உள்ளூர் செய்திகள்

கரடி நடமாட்டம் அதிகரிப்பு- வால்பாறை எஸ்டேட்டில் கூடுதல் மின் விளக்கு வசதி

Published On 2022-10-01 10:06 GMT   |   Update On 2022-10-01 10:06 GMT
  • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
  • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

வால்பாறை

வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News