உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் தொடர் மழை : 56 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2023-10-17 13:11 IST   |   Update On 2023-10-17 13:11:00 IST
  • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • 71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. வரத்து 1180 கனஅடி, திறப்பு 1300 கனஅடி, இருப்பு 3172 மி.கனஅடி.

71 அடி உயரம் உள்ள வைகை அணையி ன்நீர்ம ட்டம் 55.81 அடியாக உள்ளது. வரத்து 1442 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2849 மி.கனஅடி.

57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 112 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கனஅடியாக உள்ளது.

126 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழுகொள்ள ளவை எட்டி வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 117.75 அடியாக உள்ளது. வரத்து 66 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 86.12 மி.கனஅடியாக உள்ளது.

கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் பெய்துவரும் ெதாடர்மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு 6.4, தேக்கடி 39, கூடலூர் 4.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.4, வைகை அணை 7, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 6, பெரியகுளம் 3, அரண்மனைப்புதூர் 14.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News