விழாவில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
கோடியக்காடு ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு
- ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.