உள்ளூர் செய்திகள்

புதிய நெல் கொள்முதல்நிலையம் திறப்பு.

ரெங்கநாதபுரத்தில் புதிய நெல் கொள்முதல்நிலையம் திறப்பு

Published On 2023-06-15 15:07 IST   |   Update On 2023-06-15 15:07:00 IST
  • நிரந்தரமாக பொது இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
  • கோரிக்கை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் இடத்தில் அரசு கொள்முதல்நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் நிரந்தரமாக பொது இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்கவேண்டுமென விவசாயிகள் நீண்ட நாட்க ளாக நுகர்பொருள்வானிப கழகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிராம பொது இடத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறக்கப்பட்டு நெல்கொள்மு தல் செய்யும் பணி தொடங்கியது.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாட்சா ரவி, விவசாயிகள் கார்மேகம், பாலா. ராஜேந்திரன், கமலக ண்ணன், பெரியண்ணன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

பொது இடத்தில் அரசு கொள்முதல்நி லையம் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News