உள்ளூர் செய்திகள்

கடத்தூர் கிளை நூலகத்தில் இலவச வைபை திட்டம் தொடக்க விழா

Published On 2023-04-07 15:23 IST   |   Update On 2023-04-07 15:23:00 IST
  • கடத்தூர் கிளை நூலகத்திற்கு அதிவேக பிராட்பேண்ட் இலவச வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது
  • பல்வேறு வசதிகள் கொண்ட இந்த இணையதளத்தை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் இலவச வைபை திட்டம் தொடக்க விழா மற்றும் கடத்தூர் கிளை நூலக இணையதளம் தொடக்க விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இலவச வைபை திட்டத்தை மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரி தொடங்கி வைத்து பேசும்போது,

கடத்தூர் கிளை நூலகத்திற்கு அதிவேக பிராட்பேண்ட் இலவச வைபை வசதி வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்குத் தேவையான தகவள் களையும்,புத்தகங்களையும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கடத்தூர் கிளை நூலகத்திற்கு www.kadathurlibrary.com என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் அமேசான் கிண்டில், தேசிய மின் நூலகம், தமிழ் மின் நூலகம், மதுரைத் திட்டம் முதலான தளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மின் நூல்களையும், இதில் உள்ள நூற்றுக்கணக்கான பருவ இதழ்களையும் படிக்கலாம்.

இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட இந்த இணையதளத்தை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னதாக நூலகர் சரவணன் வரவேற்றார். முடிவில் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவில் நூலகர் முருகன், சண்முகம், கணேசன், நெடுமிடல், கே.டி.முருகன், பொம்மிடி முருகேசன், மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் வாசகர்கள் திரளாக வந்து கொண்டனர்.

Tags:    

Similar News