உள்ளூர் செய்திகள்
நொய்யல் நதிக்கரையில் திறன்மிகு திருப்பூர் லோகோ திறப்பு
- விழாவிற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
- தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களை செயல் வடிவம் கொடுக்கும் வகையில் திறன்மிகு திருப்பூர்" இலச்சி லோகோ திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் திறன்மிகு திருப்பூர் இலச்சி லோகோவை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் கே.சுப்பராயன்எம்.பி,
.பி.ஆர்.நடராஜன்எம்.பி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், புலம்பெயர் தமிழர் நல வா ரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மண்டல
தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.