உள்ளூர் செய்திகள்

புதுமைப்பெண் 2-ம் கட்டத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.இராமநாதன் தொடங்கி வைத்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் 2-ம் கட்ட தொடக்க விழா

Published On 2023-02-08 10:06 GMT   |   Update On 2023-02-08 10:17 GMT
  • கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.
  • புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

தஞ்சாவூர்:

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்க ளாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட மாக தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாணவிகளுக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, வழிகாட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

இதனை தொடர்ந்து தஞ்சையில் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம் இரண்டாம் கட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

இதில் கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு வங்கி கணக்கில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்கான ஏடிஎம் கார்டு, பைல் பேடு, புதுமைப்பெண் திட்டம் தொடர்பான வழிக்காட்டி கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5093 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 2-ம் கட்டத்தில் 2473 மாணவிகள் முதல் தவணையாக பயனடைய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News