உள்ளூர் செய்திகள்

நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துறையிடம் போலீஸ் டி.ஐ.ஜிபாண்டியன் ஒப்படைத்தார்.அருகில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் டி.எஸ்.பி. பார்த்திபன் ஆகியோர் உள்ளனர்.

விழுப்புரத்தில்: நடமாடும் தடவியல் அறிவியல் ஆய்வக வாகன சேவை: டி.ஐ.ஜி பாண்டியன் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-05 08:36 GMT   |   Update On 2022-07-05 08:36 GMT
  • விழுப்புரத்தில் நடமாடும் தடவியல் அறிவியல் ஆய்வக வாகன சேவை டி.ஐ.ஜி பாண்டியன் தொடங்கி வைக்கப்பட்டது.
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தது.

விழுப்புரம்:

தமிழக முதல்-அமை ச்சரால் கடந்த 1-ந் தேதி தமிழ்நாடு தடைய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்தியகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் இருந்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலே ந்திரபாபு உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தது.

இந்த நடமாடும் தடவியல் அறிவியல் ஆய்வக வாகனமானது விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை விரைவாக ஆராய்ந்து வழக்குகளின் விசாரணையை உறுதி ப்படுத்த பெரிதும் பயனு ள்ளதாக அமையும். இந்த வாகனம் விழுப்புரம் சரக போலீஸ டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சண்முகத்திடம் ஒப்படை க்கப்பட்டது. நிகழ்ச்சி யில் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் உள்ளி ட்டோர் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News