உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
வேப்பனபள்ளியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தங்களுடைய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். நீண்ட நேர பேச்சுவார்த்தையில் மாற்று திறனாளிகளின் கோரிக்கையை நிறை வேற்றியதை அடுத்து போராட்டத்தை கைவி டப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.