உள்ளூர் செய்திகள்

வாக்காளர்களுக்கான 6 பி படிவத்தை வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கிய காட்சி.

வேலூர் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6-பி படிவம் வழங்கல்

Published On 2022-08-25 09:08 GMT   |   Update On 2022-08-25 09:08 GMT
  • வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது.
  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது. இவற்றை பரமத்தி வேலூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகாந்த் ,வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராஜா ஆகியோர் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

எனவே, வாக்காளர்கள் தாமாகமுன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமு கப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகத்திலும் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் லட்சுமி. கிராம நிர்வாக அதிகாரி செல்வி .ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News