உள்ளூர் செய்திகள்

உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீர்.

வேதாரண்யத்தில், தொடர்மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2023-02-03 08:13 GMT   |   Update On 2023-02-03 08:13 GMT
  • கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் தேங்கியுள்ளது.
  • இதனால் உப்பள உற்பத்தியாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடி யக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மீனவர்கள், விவசாயிகள், உப்பள உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனால், பொதும க்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News