உள்ளூர் செய்திகள்

உஸ்தலஅள்ளி கிராமத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கான கட்டுமான பணி

Published On 2023-03-20 10:02 GMT   |   Update On 2023-03-20 10:02 GMT
  • அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர்.
  • ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் மோரமடுகு பஞ்சாயத்து உஸ்தலஹள்ளி கிராமத்தில் 160 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 4 கி.மீ., தொலைவில் உள்ள அகரம் கிராமத்திற்கு சென்று வந்தனர். இதனால் தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்காக இடத்தை பொதுமக்கள் அளித்தனர். அங்கு, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதே போல், கிருஷ்ணகிரி பையனப்பள்ளி பஞ்சாயத்து திருமலை நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியை துவக்கி வைக்க சென்ற எம்எல்ஏ., அசோக்குமாரிடம், அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பஞ்சாயத்து நிதி மற்றும் எம்எல்ஏ., நிதியில் இருந்து முதலில் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து இதற்கான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் காசி, ஜெயராமன், பஞ்., தலைவர் பிரதாப், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News