உள்ளூர் செய்திகள்

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொன்னகுட்டஅள்ளி ஊராட்சியில் கலெக்டர் சாந்தி ஆய்வு

Published On 2023-02-22 09:37 GMT   |   Update On 2023-02-22 09:37 GMT
  • வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • பணிகளை ஏப்ரல் 15-க்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி பருத்திகாட்டு திண்ணையில் தரிசு நில தொகுப்பு 18.05 ஏக்கரில் 14 விவசாயிகளைக் கொண்ட குழு பதிவு செய்து தரிச நில தொகுப்பு குழுவிற்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும், ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பொருத்திய பணியும் மற்றும் நுண்ணீர் பாசன திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம் திட்டப் பணிகளை குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

அத்திமரத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிட மற்றம் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், ஏரியூர் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சியில் 18.05 ஏக்கரில் மா மற்றும் எலுமிச்சை நடவு செய்யும் பணியும், நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணி முதல் ஆழ்துளை கிணற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதால் இரண்டாவது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆழ்துளை கிணற்றிக்கு மின் இணைப்பு மற்றும் இதர மா, எலுமிச்சை நடவு பணிகளை ஏப்ரல் 15-க்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்தஆய்வின் போது வேளாண்மை இணை இயக்கநர் விஜயா, செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை மாது, உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அறிவழகன் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News