தொடக்கப்பள்ளியில் மாணவர்களை உற்சாகமாக நடனமாடி ஆசிரியைகள் வரவேற்றனர்.
திருவையாறில், மாணவர்களை நடனமாடி வரவேற்ற ஆசிரியைகள்
- பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.
- வித்தியாசமான வரவேற்பு செயலால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இன்று 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. காலையில் ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
தஞ்சை அருகே திருவையாறுஅவ்வை மழலைப் தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகள் வித்தியாச மான முறையில் வரவேற்கப்பட்டனர்.
முதலில் அவ்வையா ருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் ஆசிரியைகள் திருக்குறள் கூறி அதற்கேற்றவாறு நடனமாடி மாணவ- மாணவிகளை உற்சாகத்து டன் வரவேற்ற னர்.
பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.
ஆசிரியர்களின் இந்த வித்தியாசமான வரவேற்பு செயலால் மாணவ- மாணவிகள் மட்டுமன்றி பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.