ஓசூர் மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்த துணை மேயர்
- ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் இயக்கம் தொடங்கியது.
- துணை மேயர் அதை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஓசூர் வார்டு பகுதிகளில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற மாநகரத்தின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ, 23-வது வார்டை சேர்ந்த பழைய ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா தலைமை தாங்கி, தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் விநியோகித்தார்.
மேலும் நிகழ்ச்சி யின்போது, பொதுமக்க ளுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கிரி, அன்பழகன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.