இரும்பு கடையில் ரூ. 1.50 லட்சம் பணம் கொள்ளை
- அரூர் அருகே இரும்பு கடையில் ரூ1.50 லட்சம் பணம் கொளையடித்த மர்ம நபருக்கு வலைவீச்சு.
- போலீசார் தீவிர விசாரணை
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த செல்லம்பட்டி அருகே உள்ள சங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விமலநாதன் (வயது 38). இவர் ஹெச். ஈச்சம்பாடி கிராமம் பெட்ரோல் பங்க் அருகில் இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வந்தார்.
அப்போது அந்த மர்ம நபர் இரும்பு கம்பிகள் வேண்டும் என்றும், தனக்கு கண்கள் தெரியாது நீங்களே எடுத்து வந்து காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் விமலநாதன் கடைக்குள் சென்று இரும்பு கம்பியை எடுத்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் அங்கிருந்து மாயமானார்.
இதனை தொடர்ந்து விமலநாதன் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் காணமால் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த அவர் அளித்த அரூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.