உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்.

தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-10 09:26 GMT   |   Update On 2022-10-10 09:26 GMT
  • பஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
  • பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ .ஐ. டி. யூ. சி. தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,

கடந்த கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட போனஸ் சேர்த்து வழங்கப்பட வேண்டும், பேருந்து நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகரக் கிளைகள் முன்பாக சங்கத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா,நுகர் பொருள் வாணிப கழக சங்க பொருளாளர் கோவிந்த ராஜன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் மனோகர், இருதயராஜ், குணசேகரன், சங்க நிர்வாகிகள் சுந்தர பாண்டியன், சண்முகம் , சுமன், சந்திரன், சுகு மார் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சாவூர் நகர கிளை செயலாளர் ரெங்கதுரை நன்றி கூறினார். 

Tags:    

Similar News