உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர் ஏ.ஐ.டி.யூ.சி. தர்ணா போராட்டம்

Published On 2022-12-13 09:19 GMT   |   Update On 2022-12-13 09:19 GMT
  • காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
  • 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

அரசு மேல் முறையீடு சென்றதை திரும்ப பெற வேண்டும்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அதன்படி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடந்த போராட்டத்துக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி மத்திய சங்கத் தலைவர்சேகர் தலைமை வகித்தார் .

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்தார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணைத்த லைவர்கள்சுப்பிரமணியன், பொறியாளர் ஓய்வு முருகையன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, சுந்தபாண்டியன், தங்கராசு, இருதயராஜ், கலியமூர்த்தி, தமிழ் மன்னன், சண்முகம், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News