தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தஞ்சையில், கருப்பு துண்டு அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- விவசாயிகள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண கோரி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் உடனே வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு ஆலை சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அதுவரை ஆலையை இயக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பலர் கருப்பு துண்டு அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தெலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.